ADVERTISEMENT

"உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்" தமிழார்வலர்கள் கோரிக்கை!

06:50 PM Jan 16, 2020 | kirubahar@nakk…

திருக்குறள் எனும் உலகப்பொதுமறையை உலகிற்கு கொடுத்த பெருந்தகையான திருவள்ளுவரின் 2051-ஆம் தின விழா உலகெங்கிலுமுள்ள தமிழர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் சிவக்கொழுந்து, தி.மு.க எம்.எல்.ஏ சிவா உள்ளிட்டோர் திருவள்ளுவர் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திருமுதுகுன்றம் பாவேந்தர் பேரவை சார்பில் திருவள்ளுவர் தின விழாவும், திருக்குறள் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

முன்னதாக திருவள்ளுவரை போற்றும் வகையில், அவரது திருவுருவப்படத்தை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவரது உருவ படத்தை திறந்து, மலர்தூவி வழிபாடு நடத்தினர். பின்னர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பத்து குறள் விதமாக 1330 திருக்குறளை வாசித்தனர். மேலும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், அரசு பீங்கான் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை போதிய பராமரிப்பின்றி, சிதலமடைந்து உள்ளதால், அந்த சிலையை வேறு இடத்தில் வைக்க வேண்டும் என தமிழார்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT