ADVERTISEMENT

மின்னல் தாக்கி நால்வர் உயிரிழப்பு... 10 லட்சம் நிவாரணம் வழங்க திருநாவுக்கரசர் கோரிக்கை

10:35 AM Oct 16, 2019 | kalaimohan

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பெண் விவசாய தொழிலாளர்கள் அருகில் உள்ள தண்ணீர்பந்தல்பட்டி கிராமத்தில் கடலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மழை பெய்ததால் அங்கு அமைக்கப்பட்டிருந்த தார்பாய் கொட்டகையில் இருந்து கடலை பறித்துள்ளனர். அப்போது திடீரென மின்னல் தாக்கிய சம்பவத்தில் கலைச்செல்வி, லட்சுமியம்மாள், சாந்தி, விஜயா ஆகிய 4 தொழிலாளிகள் உயிரிழந்தனர். 25 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் பலர் மயங்கி சரிந்தனர்.

ADVERTISEMENT


இவர்களை உறவினர்களும் அக்கிராம மக்களும் மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி மற்றும் மாவட்ட எஸ்பி செல்வராஜ் ஆகியோர் வந்து பார்த்து தீவிர சிகிச்சைக்கு உத்தரவிட்டனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அரசு உதவிகள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிலையில் திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவதாகவும், அந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிப்பதுடன் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளவர், தான் டெல்லியில் இருப்பதால் உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல முடியவில்லை என்றும் அதனால் மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளதாகவும் விரைவில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வருவேன் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT