புதுக்கோட்டை மாவட்டம், ஆதணக்கோட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று (13/06/2021) ஆய்வு செய்த திருச்சி தொகுதியின் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முகக்கவசத்தை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசரிடம், உங்கள் தொகுதியில் கருக்காகுறிச்சி வடதெருவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு ஒப்பந்தம் கோரி இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இது போன்ற திட்டங்களை விவசாயிகள் காலம் காலமாக எதிர்த்து வருகின்றனர், அரசாங்கமும் எதிர்க்கிறது. அதனால் மக்களின் கருத்து இல்லாமல் எதையும் செய்யக்கூடாது. மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த திட்டத்தை பொறுத்தவரை நான் மக்கள் பக்கம் நிற்பேன்" என்றார்.