ADVERTISEMENT

திமுகவை அழித்து தேர்தலில் வெற்றிபெற தொகுதிக்கு 40 கோடி: வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு

09:17 PM Mar 23, 2019 | kalidoss

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ரமேஷ் போட்டியிடுகிறார்கள் இவர்களை கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் அறிமுகம் செய்து வைத்து சால்வை அனிவித்து மரியாதை செலுத்தி ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி,திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திருமாவளவன் இந்தத் தேர்தல் மிக முக்கியமானது மத்தியில் மோடியை அகற்றவும், தமிழகத்தில் எடப்பாடியை விரட்டி மத்தியில் ராகுல் காந்தியை பிரதமராக்கவேண்டும், தமிழகத்தில் மு க ஸ்டாலினை முதல்வராக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இங்கு கூடியுள்ள கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி அவர்கள் கூட்டியிருக்கும் கூட்டணி விலை கொடுத்து வாங்கிய வர்த்தகக் ரீதியான கூட்டணி . உலகம் முழுவதும் ஒலிக்கும் ஒரே குரல் மீண்டும் வேண்டாம் மோடி எனவே மோடியையும் எடப்பாடியையும் விரட்ட கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள்அதி தீவிரமாக செயல்பட வேண்டும். தேர்தலுக்கு நாட்கள் மிகவும் குறைவாக உள்ளது. வரும் 25-ஆம் தேதி சிதம்பரம் தொகுதிக்கு அரியலூரிலும் கடலூர் தொகுதிக்கு கடலூரிலும் மனு தாக்கல் செய்கிறார்கள். அதனை தொடர்ந்து 26-ந்தேதி தொகுதிகளில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. திமுகவை வீழ்த்த ஒரு தொகுதிக்கு 40 கோடி ரூபாய் செலவு செய்ய கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதனைத் தாண்டி மக்கள் மோடி, எடப்பாடியை விரட்ட தயார் நிலையில் உள்ளனர் . மனிதன் நாகரிக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது பானை., அந்தப் பானையே நமக்கு சின்னமாக கிடைத்தது இருப்பது பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது 40 க்கு 40 தொகுதிகளை வென்றெடுக்க ஒவ்வொரு கூட்டணி கட்சியினரும் தனித்தனியாக பறக்கும் படை அமைத்து பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவதை தடுக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் என பேசினார்.

திமுக முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில் கூட்டணியில் வேட்பாளரை அறிவித்து விட்டால் அந்த வேட்பாளரை சொந்தகட்சி வேட்பாளர் போல் வெற்றிக்கு பாடுபடுவோம். இந்த தேர்தலில் திருமாவை 1 லட்சம் வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற உறுதியேற்போம் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம் பேசுகையில், அனைவரும் சாதியத்தை மறந்து கொள்கையின் அடிப்படையில் செயல்படவேண்டும். மோடியின் ஆட்சியில் கடலூர் மாவட்டம் ஹெட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட விவசாயத்திற்கு எதிரான நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மோடியையும் எடப்பாடியையும் விரட்ட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டும் என்றார்.

கூட்டத்தில் திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளர் புகழேந்தி, புவனகிரி திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன். மதிமுக சார்பில் மாநில நிர்வாகி வந்தியதேவன், சிபிஎம் மாநிலக்குழு மூசா, மாதவன், சிபிஐ மாவட்ட மாநில நிர்வாகி மணிவாசகம், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில நிர்வாகி திருமாவளவன்,மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து பேசினார்கள்.

பெட்டிசெய்தி

எம்ஆர்கே பன்னீர்செல்வம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பானை சின்னம் அறிவிக்கப்பட்டு சிறிது நேரத்திலே கடந்த 20 வருடத்திற்கு முன் சினிமாவில் படலாக வந்த பாடல் நமக்காக பாடியது போல் வாட்ஸ்அப் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பரவிவிட்டது என பேசிக்கொண்டு இருந்த போதே திருமாவளவன் அவரது செல்போனில் இருந்த அந்த பாடலை ஆன் செய்து கையில் வைத்திருந்த மைக்கு அருகில் வைத்தார். அரங்கம் முழுவதும் அந்த பாடல் ஒலித்தது எங்கிருந்து பாடல் வருகிறது என்று அனைவரும் விழித்தனர். பின்னர் இவர் செய்ததை பார்த்து அரங்கத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT