
திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்பொழுதுஅவரை அரசியல் தலைவர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திடீர் காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் நண்பர்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர். நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமாவளவனை தொடர்பு கொண்டு நலம் விசாரித்திருந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)