ADVERTISEMENT

 ’பட்டேல் சிலைக்கு 3 ஆயிரம் கோடி செலவு செய்திருப்பது ஏழை எளிய மக்களை கேவலப்படுத்துவதாக தோன்றுகிறது’-திருமாவளவன் பேட்டி! 

06:15 PM Oct 31, 2018 | sundarapandiyan

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்
செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.

ADVERTISEMENT

அப்போது அவர், ‘’பிரிட்டிஷ் இந்தியா, சமஸ்தான இந்தியா என்று பிரிந்து கிடந்த இந்தியாவை ஒருங்கினைந்த இந்தியாவாக மாற்றுவதற்கு முக்கிய பங்கு வகித்தவர் பிஸ்மார்க் என்று அழைக்கப்படும் சர்தாய் வல்லபாய் படேல் ஆவார். அவரை போற்றுவது, நினைவு கூர்வது, வருங்கால இளைய தலைமுறைகளுக்கு தெரியபடுத்தும் நோக்கம் வரவேற்கத்தக்கது.

ஆனால் அதற்காக சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு 3000 கோடி ரூபாயில் செலவு செய்திருப்பது, ஏழை, எளிய மக்களை கேவலபடுத்துவது போன்றதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உணர்கிறது.

இந்தியாவில் கோடிக்கனக்கான மக்கள் ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமலும், இருப்பிடம் இல்லாமலும், பல்வேறு கிராமங்களில் மின் இணைப்பு, சாலை வசதி கூட இல்லாமல், வறுமையில் வாடும் நிலையில், சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு, 3000 கோடி செலவு செய்திருப்பது என்பது வேதனை அளிக்கிறது. மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், தமிழ் மொழியை அவமதிக்கும் விதத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை வளாகத்தில் 'ஸ்டேட்டேட் ஒப்பி யூனிட்டி' தமிழில் தவறாக மொழியாக்கம் செய்யப்பட்டது என்பது கவனக்குறைவு, அலட்சிய செயலால் செய்யப்பட்டது போல் தெரியவில்லை, தமிழ் சமூகத்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்பதை உணர முடிகிறது.

சர்தார் வல்லபாய் படேலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது தேசப்பிதா காந்தியடிகளுக்கு எதிராக சங்பரிவார் அமைப்புகள் முன்னிறுத்துவதில் அரசியல் உள்ளீடுகள் இருப்பதாக விடுதலை சிறுத்தை கட்சி கருதுகிறது" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT