ADVERTISEMENT

"10 ஆண்டுகளாக சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

11:38 AM Dec 31, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் நேற்று (30/12/2021) எதிர்பாராத விதமாக கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், அதை அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (31/12/2021) காலை சென்னை ஆழ்வார்பேட்டை, தி.நகர். ஜி.என்.செட்டி உள்ளிட்ட இடங்களில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்று வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு, மழைநீரை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மழை பாதிப்புகளை சீர்செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையை 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளதால் மழைநீர் தேங்குகிறது. அடுத்த பருவமழைக்குள் மீண்டும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

வானிலையைக் கணிக்கும் இயந்திரங்களில் ஏதேனும் கோளாறு உள்ளதா? அதை மாற்றுவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மத்திய அரசிடம் நினைவூட்டப்படும்" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT