ADVERTISEMENT

"வெளிநாடு அழைத்துச் செல்ல அவசியம் ஏற்படவில்லை.." - அப்போலோ மருத்துவர்கள் வாக்குமூலம்!

04:28 PM Apr 18, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இடையில் நீதிமன்றம் தடை காரணமாக விசாரணையில் சில தடை ஏற்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளைக் கடந்து தற்போதும் விசாரணை சூடு பிடித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு, ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் நேரடியாக ஆஜராகி விளக்கம் கொடுத்த நிலையில் அப்போலோ மருத்துவமனை ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரியிருந்தது. இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரிய அப்போலோ மருத்துவமனையின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் " ஆணையம் அவர்களை (மருத்துவர்களை) விசாரிக்க எந்த தடையும் இல்லை" என்ற தீர்ப்பை வழங்கியிருந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

அவர்களிடம் ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததைப் பற்றி ஆணையம் அவர்களிடம் கேள்வி எழுப்பியது. இதற்குப் பதிலளித்த மருத்துவர்கள், " வெளிநாடுகளுக்கு இணையான சிகிச்சை அப்போலோ மருத்துவமனையில் வழங்கப்படுவதால் வெளிநாடு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை" என்று தெரிவித்தனர். ஜெயலலிதா தொடர்பாக அவர்களிடம் பிற்பகலிலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT