ADVERTISEMENT

நமக்கு 3 பொண்ணு இருக்கு... சொன்னா கேளு... விடாத மனைவி - தீர்த்துக்கட்டிய கணவன்

01:21 PM Sep 07, 2018 | rajavel


சிவகங்கை மாவட்டம், கல்லல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 47). இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். மூன்று பிள்ளைகள் என்பதால் படிக்க வைக்கவும், வளர்த்து திருமணம் செய்யவும் இங்கு இருந்து வேலை செய்தால் அந்த வருமானம் போதாது, ஆகையால் வெளிநாடு சென்று வேலை செய்தார் செல்வராஜ்.

ADVERTISEMENT

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். அதன் பிறகு அவர் வெளிநாடு செல்லவில்லை. ஏன் மீண்டும் வெளிநாடு செல்லவில்லை என்று சரஸ்வதி அடிக்கடி கேட்டுள்ளார். அதற்கு, நான் இங்கு ஜே.சி.பி. ஆபரேட்டர் வேலை கேட்டுள்ளேன். அந்த வேலை வந்தவுடன் இந்த வருமானமே நமக்கு போதும் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இருப்பினும் சரஸ்வதி, இந்த வயதில் வெளிநாடு சென்றால்தான் நாலு காசு சேர்க்க முடியும். மூன்று மகள்களை படிக்க வைத்து திருமணம் செய்து கொடுக்க வேண்டாமா என்று கேட்டுள்ளார். பின்னர் ஜே.சி.பி. ஆபரேட்டர் வேலை கிடைத்தவுடன் செல்வராஜ் அந்த வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில், சரஸ்வதிக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த செல்வராஜ் கோபமடைந்தார். இதனால்தான் வெளிநாடு போகவில்லையா என அடிக்கடி சரஸ்வதி கேட்டது தெரிய வந்தது. இந்த விசயம் வெளியில் தெரிந்தால் அசிங்கம். நமக்கு 3 மகள்கள் இருந்தும் இதுபோன்ற தவறை செய்யக்கூடாது என்று தனது மனைவியை கண்டித்துள்ளார்

ஆனால் அவர் கள்ளத்தொடர்பை விடவில்லை. இதுதொடர்பாக கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏறபட்டு வந்துள்ளது. இவர்கள் தகராறு காவல்நிலையம் வரை சென்றது. போலீசார் ஜானகிக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவர் தனது கள்ளத்தொடர்பை விடவில்லை.

இந்தநிலையில் வாலிபருடன் சரஸ்வதி தனிமையில் இருப்பதாக செய்தி கேள்விப்பட்டு, வீட்டுக்கு சென்ற செல்வராஜ், மனைவி சரஸ்வதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த செல்வராஜ், கடப்பாரையால் தனது மனைவியை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சரசுவதி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.

இந்த சம்பவம் குறித்து கல்லல் போலீசார் ஜானகி உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து செல்வராஜை கைதுசெய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT