ADVERTISEMENT

 ஓ.பி.எஸ். யார் காலில் விழுந்தாலும் அவரும், மகனும் ஜெயிக்கப்போவதில்லை! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பகீர் பேட்டி!!

04:58 PM May 08, 2019 | sakthivel.m

ADVERTISEMENT

தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூட்டணி கட்சியினருடன் தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் புகார் மனு கொடுத்தார். இந்த புகார் மனுவில், புதிதாக கொண்டுவரப்பட்ட 50 வாக்குப்பதிவு மெஷின்களை மீண்டும் கோவைக்கே எடுத்துச் செல்ல வேண்டும்.

ADVERTISEMENT

இந்த பாராளுமன்ற தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கான அவசியமே ஏற்படவில்லை. அதுபோன்ற நிலையில் மீண்டும் இரண்டு மையங்களில் வாக்குப்பதிவு நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என கூறுவது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

அதன்பின் கலெக்டர் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது... நடந்து முடிந்த தேனி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் சிறப்பாக எந்தவித பிரச்சனையும் இன்றி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடந்து முடிந்துள்ளது. ஆகவே மறு தேர்தல் நடத்த தேவையில்லை என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கூறியுள்ளோம்.

மேலும் கோவையில் இருந்து கொண்டுவந்த 50 மெஷின்களையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளோம். துணை முதல்வரும், தோல்வி பயத்தால் வாரணாசி சென்ற போது, மோடியின் காலில் விழுந்து தனது பையனை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று கெஞ்சி இருக்கிறார். ஆனால் துணை முதல்வா யார் காலில் விழுந்தாலும் அவர் பையனும் வெற்றி அடைய போவதில்லை என்று கூறினார்.

மேலும் துணை முதல்வர் ஏதாவது செய்துவிடலாம் என்று நினைத்தாதல் கட்சிக்காரர்களும், பொதுமக்களும்,பெரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறினார். இந்த பேட்டியின் போது தேனி மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தேனி மாவட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன், ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் மகாராஜன், பெரியகுளம் திமுக வேட்பாளர் சரவணக்குமார், தேனி திமுக ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, தேனி ஜீவா, உட்பட மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT