ADVERTISEMENT

தேனி நியூட்ரினோ திட்டத்தினால் ஆபத்து இல்லை!! -திட்ட இயக்குனர் விவேக் தத்தார்

12:06 PM Jul 14, 2018 | vasanthbalakrishnan

தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ திட்டம் பற்றிய விளக்க செய்தியாளர் சந்திப்பில் நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் விவேக் தத்தார் கலந்துகொண்டு பேசினார்,

ADVERTISEMENT

ADVERTISEMENT

நியூட்ரினோ ஆய்வினால் எந்த ஒரு சுற்று சூழல் கேடும் இருக்காது மேலும் இது ஒரு ஆய்வு மட்டுமே இதில் எந்த விதமான கதிர்வீச்சும் இருக்காது பாதிப்பும் இருக்காது.

வளிமண்டலத்தில் உள்ள நியூட்ரினோ துகள்களை கணக்கிடுவதுதான் இந்த ஆய்வின் நோக்கமே தவிர வேறு எந்தவிதமான தொழில் நோக்கமும் இந்த ஆய்வில் இல்லை. இந்த திட்டத்தின் செயல்பாடுகளை மாணவர்கள், பொதுமக்கள்,கல்லூரி ஆசிரியர்கள் என அனைவரும் வந்து பார்வையிடலாம்.

பூமியை துளைத்து இந்த ஆய்வு நடத்தப்படுவதில்லை மலைக்கு கீழ் பகுதியில் நடத்தப்படுக்கிறது. இந்த ஆய்விற்கான கருவிகள் அனைத்தும் இந்திய மாணவர்கள் மற்றும் இந்திய ஆய்வுகூடங்களில் உருவாக்கப்படவிருக்கும் கருவிகள்தான் பயன்படுத்தவிருக்கின்றது என கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT