ADVERTISEMENT

பனை நடவு பணியில் தேனி மாவட்ட தன்னார்வலர்கள்!

10:19 AM Aug 30, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேனி மாவட்ட தன்னார்வலர்களின் மூன்றாவது ஆண்டு பனை நடவு பயணத்தின் முதல் களப்பணி தேனி மீறுசமுத்திரம் கண்மாய் கரையில் தொடங்கியது. இந்த தொடக்க விழாவுக்கு தேனி ரூரல் அப்ளிமென்ட் சொசைட்டி டிரஸ்ட் தலைவர் யாசர் அராபத் தலைமை தாங்கினார். தேனி போலீஸ் துணை சூப்பரிண்டன்டு முத்துராஜ், பாலசங்கா & அக்சயா நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் செந்தில் நாராயணன், தேனி கவுமாரியம்மன் உணவுக்குடும்ப நிர்வாக இயக்குநர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பனை நடவு களப்பணியைத் தொடங்கி வைத்தார். விழா எளிமையாகவும் இனிமையாகவும் நடந்தது. கண்மாயில் சுமார் 800 பனை விதைகள் விதைக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளில் தேனி மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் பனை விதைகள் இவர்களால் விதைக்கப்பட்டன. இந்த ஆண்டு 1 லட்சம் விதைகள் விதைக்க வேண்டும் என்ற இலக்குடன் களப்பணியைத் தொடங்கி உள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT