ADVERTISEMENT

தேனி காங்கிரஸ் தொகுதிக்கு ஆரூண் அல்லது அவரது மகனுக்கு சீட்டு

10:24 AM Mar 16, 2019 | sakthivel.m

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு பத்து பாராளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி பாராளுமன்ற தொகுதியும் அடக்கம்.

ADVERTISEMENT


தேனி நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை முக்குலத்தோர் சமூகத்திற்கு அடுத்தபடியாகத்தான் மற்ற சமூகத்தினர் இருந்து வருகிறார்கள். அதில் முஸ்லிம் மக்களும் ஓரளவுக்கு இருந்து வருகிறார்கள். அப்படி இருந்தும் கடந்த 2004 பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலில் டிடிவியை எதிர்த்து போட்டியிட்டு ஆரூண் வெற்றி பெற்றார். அதன்பின் 2009 நடந்த பாராளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக ஆருண் போட்டியிட்டு தங்க.தமிழ்ச்செல்வனை படுதோல்வியடையச் செய்தார்.

டிடிவியையும், தங்கதமிழ்செல்வனையும் தோற்கடித்து இரண்டு முறை வெற்றி பெற்று இருக்கிறார். இப்படி ஆரூணிடம் தோல்வியை தழுவிய அந்த இரண்டு பேருமே முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த இருவர் தோல்விக்கு துணை முதல்வரான ஓபிஎஸ் பங்கும் மறைமுகமாக இருந்து வந்தது. அதுபோல் கடந்த 2009 தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி இல்லாததால் தனித்து காங்கிரஸ் சார்பில் களம் இறங்கி ஆரூண் தோல்வியை தழுவினார். அப்படி இருந்தும் 71 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி இருந்தார். அந்த அளவுக்கு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஆரூண் மூன்று முறை போட்டி போட்டு இரண்டு முறை வெற்றி பெற்று தேனி தொகுதியை திமுக கூட்டணி பலத்துடன் காங்கிரஸ் கோட்டையாகவும் உருவாக்கியிருக்கிறார்.


இந்த நிலையில்தான் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் தேனி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என தலைமை வலியுறுத்தியதின் பேரில் திமுகவும் தேனி தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து இருக்கிறது. அதன் அடிப்படையில் மூன்று முறை போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்ற சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஆரூண் மீண்டும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி வருவதால் தொகுதியில் உள்ள மற்ற கதர் சட்டைகள் சீட் கேட்க சரிவர ஆர்வம் காட்டவில்லை. அதுபோல் ஆரூணுக்கு சோனியா, ராகுல் வரை தனி செல்வாக்கு இருப்பதால் தமிழக தலைமையும் ஆரூணைத் தான் களமிறக்க தயாராகி வருகிறது.

இருந்தாலும் ஆரூணுக்கு உடல் நலம் சரி இல்லை என்ற பேச்சும் ஒருபுரம் இருந்து வருவதால் ஆரூண் தன் மகன் அசன்ஆரூணை களத்தில் இறக்கலாம் என்ற முடிவிலும் இருந்து வருகிறராம். இப்படி காங்கிரஸ் சார்பில் தேனி தொகுதியில் ஆரூண் அல்லது அவரது மகன் அசன்ஆரூண் போட்டியிடப் போவதாக கதர் சட்டைகள் மத்தியில் பரவலாக பேச்சும் அடிபட்டு வருகிறது. ஆக தேனி பாராளுமன்ற தொகுதியில் நான்காவது முறையாக காங்கிரஸ் களம் இறங்கி தொகுதியை ஆரூண் மூலம் தக்க வைக்க இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT