ADVERTISEMENT

காவல்துறை குடியிருப்பில் கொள்ளையடித்த திருடன்!!! கவலையில் போலிஸாரின் குடும்பம்...

09:16 PM May 13, 2019 | raja@nakkheeran.in

வேலூர் மாநகரம் போக்குவரத்து காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருப்பவர் சண்முகம். இவர் காவல்துறை அதிகாரிகளுக்கான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் கடந்த மே 11ந்தேதி குடும்பத்துடன் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். மே 13ந்தேதி தான் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் வந்து பார்த்தபோது, அவர் வீட்டு கதவின் தாழ்ப்பாள் ஸ்குரூ கழட்டப்பட்டு இருந்துள்ளது.

ADVERTISEMENT


உள்ளே சென்று பார்த்தபோது, பெட்ரூமில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி சண்முகம் காவல்நிலையத்தில் தந்த புகாரில், பீரோவுக்குள் வைத்திருந்த 8 சவரன் தங்கநகை, இரண்டு கிலோ வெள்ளி நகை, 65 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் திருடுபோய்வுள்ளதாக கூறப்படுகிறது.

திருடு நடந்தது எனச்சொல்லப்பட்ட முதல்கட்ட தகவலின்போது, சில லட்சங்கள் பணம் திருடுபோய்வுள்ளது என தகவல் கூறப்பட்டது. அதன்பின் என்ன நடந்தது என தெரியவில்லை. போலிஸார் 65 ஆயிரம்தான் திருடுபோனதாக கூறுகின்றனர்.

எவ்வளவு பணம் திருடு போனது என்பதில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது ஒருபுறமென்றால், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கும் அதிகமான காவல்துறையின் இரண்டாம் நிலை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குடும்பங்கள் வசிக்கின்றன. முழுக்க காவல்துறையினர் வசிக்கும் இடத்துக்குள் வந்த திருடன் கதவை உடைத்து தங்கநகை, பணம் என திருடிச்சென்றது காவல்துறையை சேர்ந்தவர்களின் குடும்பங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தனக்கு வந்தால்தான் அதன் வலி தெரியும் என்பது போல, ஊரெல்லாம் திருடுபோனபோது, பொதுமக்கள் வந்து புகார் தந்தபோது, புகாரை மட்டும் வாங்கி பதிவு செய்துகொண்டு தொங்கலில் விட்டனர் காவல்துறை அதிகாரிகள். இப்போது அரசின் காவல்துறையினருக்கான குடியிருப்பில் ஒரு காவல்துறை அதிகாரியின் வீட்டிலேயே திருடுபோய்வுள்ளது. இப்போதாவது நடவடிக்கையில் இறங்குமா வேலூர் மாவட்ட காவல்துறை.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT