ADVERTISEMENT

’தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலை உருவாகி விடும்’ - நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை

08:33 AM Jul 13, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

காவல்துறையினரின் நலன் பணி குறைப்பு ஆர்டர் லீ தொடர்பான வழக்குகள் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கடந்த முறை நீதிபதி கிருபாகரன் இந்த வழக்கை விசாரித்த போது காவல் துறையினருக்கு வாரம் ஒருநாள் ஏன் விடுப்பு வழங்க கூடாது என்று கேள்வி எழுப்பி அதற்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.


அதன்படி இன்று அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி விளக்கம் அளித்தார் " போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டரில் உள்ள விதிமுறைகள் தொடர்பாக அவர் தாக்கல் செய்தார் அதில் காவல்துறையினர் ஒவ்வொருவருக்கும் வாரம் விடுப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வார விடுப்பு நாளில் பணிக்கு வரும் காவலர்களுக்கு 200 ரூபாய் கூடுதல் பணி நேரம் ஊதியம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஒவ்வொரு வாரமும் 200 ரூபாய் தருகிறார்கள் என்றால் யாரும் விடுப்பு எடுக்க மாட்டார்கள் என்றும் பணிக்கு வர தான் செய்வார்கள் என்று தெரிவித்து, அரசு ஊழியர்கள் மாதத்தில் இரண்டு நாள் விடுப்பு எடுக்கும் நிலையில் காவலர்களுக்கு ஏன் ஒரு நாள் சுழற்சி முறையில் வார விடுப்பு அளிக்கக்கூடாது என்று விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.


அதேபோல் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு மதுபானம் அருந்துவதுதான் காரணம் என்றும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார். காவல்துறை மீதும் அரசு மீதும் தான் மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அந்த நம்பிக்கை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று நீதிபதி தெரிவித்தார்.


காவல் பணியில் ஈடுபடும் காவலர்களை வாரத்தில் ஒரு நாளாவது தங்கள் குடும்பத்துடன் செலவிட அரசு அனுமதிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். காவல்துறையின் பணி என்பது மிகவும் அவசியமானது என்றும் காவல்துறையினர் இல்லையென்றால் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலை உருவாகி விடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை தெரிவித்தார்.


வாகனங்களில் கட்சி கொடி, தலைவர்களின் படங்கள், அரசியல் பொறுப்புகள் போன்ற பலகைகளை வைத்திருப்பதை கட்டுப்படுத்த முடியுமா என்பதையும் பரிசீலியுங்கள். ஏனென்றால் எந்த புத்தில் என்ன பாம்பு இருக்கு என்பது தெரியாது என்று நீதிபதி தெரிவித்தார்.


கடந்தாண்டு 10,12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற காவல் துறையினரின் குழந்தைகள் பெரும்பாலானோர் போக்குவரத்து காவலர்களின் வாரிசுகளாக இருந்ததாகவும் நீதிபதி குறிப்பிட்டார் இதற்கு முக்கிய காரணம் சட்டம் ஒழுங்கு காவல் துறை மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் வீட்டிற்கு செல்வது சிரமமாக இருப்பதாகவும் போக்குவரத்து காவல்துறையினர் குடும்பத்திடம் நேரம் செலவளிப்பார்கள் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.


காவல் துறையினருடன் குற்றவாளிகளுடன் கைகோர்க்க கூடாதென்றும், அவர் கைது செய்யப்பட்டார் அரசியல் நிலைமை மிகவும் மோசமாகி விடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை தெரிவித்தார்.


காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு என்பது ஆவணங்களை மட்டுமே இருப்பதாகவும் அதை நடைமுறைக்கு கொண்டுவரும் வகையில் அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை விளக்கமாக தெரிவிக்க உத்தரவிட்டார்.


இதுதவிர காவல்துறையின் நல ஆணையம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எந்த நிலையில் உள்ளது என்பது விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார். பணிக்கு வரும் காவலர்களுக்கு 200 ரூபாய் வழங்கப்படும் என்ற விதியை மாதத்தில் ஒரு வாரத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று மாற்ற முடியுமா என்பதையும் அரசிடம் விளக்கம் தெரிவிக்க அவர்கள் அறிவுறுத்தி வழக்கை ஜுலை 19ஆம் தேதிக்கு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT