ADVERTISEMENT

தமிழில் குடமுழுக்கு கோருவது அரசியலுக்காக- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி!

11:18 PM Jan 28, 2020 | santhoshb@nakk…

தஞ்சை பெரியக்கோவில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என மொழிகளிலும் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையதுறை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதிலளித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், "இறை நம்பிக்கையற்றவர்கள் அரசியலுக்காக தமிழில் குடமுழுக்கு வேண்டும் என கூறி வருகின்றனர். தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை. குடமுழுக்கு நடத்துவது குறித்த இறுதி முடிவை இந்து சமய அறநிலையத்துறை எடுக்கும். ஆறாம் நூற்றாண்டு வரை தமிழில் மட்டுமே வழிபாடுகள் நடைபெற்றுள்ளன. 7- ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தான் சமஸ்கிருதத்தில் வழிபாடுகள் தொடங்கின. மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களையும் தமிழக அரசு அனுமதிக்காது." இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT