Skip to main content

"அரசுக்கு வருவாய் குறைந்துள்ளது"- முதல்வர் பழனிசாமி பேட்டி!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

trichy collector office cm palanisamy press meet


திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். 

 

அப்போது அவர் கூறியதாவது; "அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனாவைத் தடுக்க உலக நாடுகளே திணறி வரும் சூழலில் தமிழகம் சிறப்பாகச் செயல்படுகிறது. திருச்சி சிப்காட்டில் 250 ஏக்கரில் ரூபாய் 200 கோடி மதிப்பில் தொழிற்பூங்கா ஏற்படுத்தப்படும். திருச்சியில் தொழில் தொடங்க ஐந்து நிறுவனங்களுடன் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

 

திருச்சியில் 6,128 சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூபாய் 269 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது; மேலும் ரூபாய் 200 கோடி வழங்கப்படும். முக்கொம்பில் தடுப்பணை கட்டும்பணி 40% நிறைவடைந்துள்ளது. ரூபாய் 495 கோடியில் கொள்ளிடத்தில் புதிய கதவணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து மருத்துவக் குழு உடனான ஆலோசனைக்குப் பிறகு முடிவு செய்யப்படும். தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பதில் மாற்றமில்லை. 

 

மருத்துவத்துறை சார்ந்த பிரச்சனைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான தேவை ஏற்படவில்லை. மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனை, பரிந்துரைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் குறைப்பு ஏற்பட்டுள்ளது. மாதம் ரூபாய் 12 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என நிதித்துறைச் செயலர் கூறியுள்ளார்." இவ்வாறு முதல்வர் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகாரப் போட்டி; பேரூராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
A heated argument between the district president DMK district secretary!

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற பிரச்சனையில் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் பேரூராட்சி  தலைவருக்கும் திமுக பேரூர் செயலாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி சாதாரண கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அப்போது குறுக்கிட்ட கவுன்சிலரும் திமுக பேரூர் செயலாளருமான விஜி என்ற விஜயகுமார், பேரூராட்சி வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி வருகிறது. வரும் நிதிகளை திட்டப் பணிகளாகப் பிரிப்பது தொடர்பாக யாரை கேட்டு முடிவு எடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த தலைவர் செல்வராஜ், 'நீ வேண்டுமானால் தலைவராக இருந்து கொள். நான் எழுதித் தருகிறேன்' என்று ஆவேசமாக பேச, இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் இருவரும் ஒருமையில் பேசிக்கொள்ள, பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் இருவரும் சமாதானம் அடைந்து பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றினர். பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பேரூராட்சி பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற போட்டி தற்போது பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் வெடித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'இனி ஜெட் வேகம்தான்; பலபேர் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்கள் '- இபிஎஸ் பேச்சு

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
 'AIADMK will operate at jet speed' - EPS speech

கடந்த வருடம் ஜூன் 22 ஆம் தேதி அதிமுகவின் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல்முறையாக இன்று அதிமுக பொதுக்குழு கூடியுள்ளது.

அதிமுகவின் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை நடைபெறும் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களை இபிஎஸ் முன்மொழிய, கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்துள்ளார்.

தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகள் பேசினர். அதிமுக நிறைவேற்றி இருக்கும் தீர்மானங்கள்; மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கைகளை திமுக அரசு முறையாக செய்யவில்லை என கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கி நஷ்டம் ஏற்பட்ட நிலையில் நிவாரணம் வழங்கப்படவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு வழியாக தமிழ் மொழியைக் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச்செயலராக தேர்ந்தெடுத்த தொண்டர்கள், தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றி. அதிமுகவின் பிரம்மாண்ட மாநாடு மிகச் சிறப்பாக எழுச்சியாக மதுரையில் நடைபெற்று முடிந்தது. அதிமுக மாநாட்டில் மதுரை நகரமே குலுங்கியது. இன்று இருக்கின்ற விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக மாநாட்டை விமர்சித்து பேசினார். அதிமுக மாநாட்டை போல எங்கள் மாநாடு இருக்காது. எடுத்துக்காட்டு மாநாடாக சேலத்தில் நடைபெற இருக்கின்ற திமுக மாநாடு நடக்குமென்று சொன்னார். அவர் சொன்னதுதான் மூன்று முறை திமுக மாநாடு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது.  

அதிமுகவை விமர்சிக்கும் போதே இந்த பாதிப்பு இருக்கிறது உங்களுக்கு. எந்த கொம்பனாலும், அதிமுகவை அழிக்கவோ முடக்கவோ முடியாது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும். அண்மையில் ஒரு அமைச்சருக்கு தண்டனை கிடைச்சிருக்கு. இன்னும் பல அமைச்சர்கள் தண்டனை பெற காத்துக்கொண்டிருக்கிறாரக்ள். நாடாளுமன்ற தேர்தலுக்குள்ள பலபேர் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்கள். சொல்லவே கூசும் அளவிற்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சொல்லலாமா? சொல்லவே வாய் கூசுகிறது. சில போதை ஆசாமிகள் பசு ஈன்ற கன்றுக்குட்டியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள ஆட்சி இந்த ஆட்சி. எந்த ஆட்சியிலாவது இப்படி நடந்துள்ளதா?'' என்றார்.