ADVERTISEMENT

காமன்வெல்த் தங்க மங்கையை பாராட்டிய அமைச்சர்

10:35 AM Jul 23, 2019 | rajavel

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்தவர் அனுராதா. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தொகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். காவல்நிலையத்தில் பணி என்றாலும் பளுதூக்கி சாதிப்பதே லட்சியமாக கொண்டிருந்தார். இவர் கனவை நினைவாக்கும் விதமாக ஆஸ்திரேலியா சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 87 கிலோ உடல் எடைப் பிரிவில் 'ஸ்னாச்' முறையில் 100 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 121 கிலோ என மொத்தம் 221 எடை தூக்கி தங்க பதக்கம் வென்றார்.

ADVERTISEMENT


அனுராதாவின் சாதனை குறித்து நக்கீரன் இணையத்தில் முதலில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்து புதுக்கோட்டை வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில், சொந்த ஊரில் இருந்த அனுராதாவை புதுக்கோட்டையில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதுடன் ரூ 50 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கினார். விரைவில் முதலமைச்சரை சந்திப்பதற்காண முயற்சி செய்வதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டார்.


விளையாட்டு வீரர்களை பாராட்டும் போது அவர்களுக்கு ஊக்கம் கிடைக்கிறது. அதனால் அடுத்தடுத்து சாதனைகள் செய்ய முடியும் என அனுராதாவை பாராட்டினர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT