
தமிழகத்தில் தற்போதுதான் குட்கா புயல் அடித்து அமைச்சர்கள் முதல் டிஜிபி வரை சோதனை நடந்து முடிந்தது. அந்த புயல் அடங்குவதற்குள். தற்போது போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசுமுறை பயணமாக லண்டனுக்கு சென்று இருக்கிற நேரத்தில் அமைச்சருக்கு நெருக்கமான நண்பர்களின் குவாரிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக்கொண்டுடிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இங்கிலாந்து நாட்டில் இயங்கி வரும் சி-40 என்ற முகமையுடன் இணைந்து சென்னையில் மின்சார பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த முகமையினர் சமீபத்தில் இங்கு வந்து ஆய்வு நடத்தினர். அப்போது, அமெரிக்கா லண்டனில் நடைபெறும் மின்சார பஸ்கள் தொடர்பான கருத்தரங்குகளில் பங்கேற்குமாறு போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி, கடந்த 9-ம் தேதி அமைச்சரும், கூடுதல் செயலாளர் டேவிதாரும் அமெரிக்கா சென்றனர். அங்கு சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த மின்சார பஸ்கள் கண்காட்சியில் கலந்து கொண்டனர். பின்னர் லண்டன் சென்று மின்சார பஸ்களை பார்வையிட்டனர். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘சி-40 முகமையின் உதவியோடு விரைவில் சென்னையில் மின்சார பேருந்துகள் இயங்கிட இந்த பயணம் பயனுள்ளதாக இருக்கும் என்றார். இந்த பயணத்தை முடித்துகொண்டு போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று இரவு சென்னை வந்துள்ளார்.
இந்த லண்டன் பயணத்திற்கு இடையில் தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நண்பர்களுக்கு கா.பரமத்தி சொந்தமான கல்குவாரிகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரைடு நடத்தி வருகிறார்கள். இந்த இந்த சோதனையில் விஜயபாஸ்கருக்கு தேர்தலின் போது அவருக்கு சொந்தமாக கல்குவாரிகள், இல்லை என்பதும், அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கல்குவாரிகள் சொந்தமாக்கியதாக முதல் கட்ட தகவல், வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையினால்அ.தி.மு.க வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதுவும் அமைச்சர் லண்டனில் இருக்கும் போது இந்த சோதனை சம்பவம் அமைச்சரின் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.