ADVERTISEMENT

டெண்டர் முறைகேடு வழக்கு.... எடப்பாடியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

04:46 PM Sep 14, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கியதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கு தொடர்ந்திருந்தார். உச்சநீதிமன்றம் வரை சென்ற வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இன்று இந்த வழக்கு விசாரணை நீதிபதி இளந்திரையனுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை வைத்தது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் 'ஏற்கனவே இந்த வழக்கில் ஆரம்பக்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை முடித்துள்ளது. இதன் அறிக்கை ஆணையரிடம் உள்ளது' என தெரிவித்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனுத்தாக்கல் செய்யும் வரை இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், வழக்கை செப்.26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்ததோடு பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT