ADVERTISEMENT

எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த பத்தாண்டு தொலை நோக்கு திட்ட ஆலோசனைக் கூட்டம்! 

05:03 PM Aug 03, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் ‘பத்தாண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம்’ என்ற தலைப்பில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் அப்துல் சமது எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. மணப்பாறை ஒன்றியக் குழு தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி, வையம்பட்டி ஒன்றிய குழு தலைவர் குணசீலன், மருங்காபுரி ஒன்றிய குழு தலைவர் பழனியாண்டி மற்றும் மருங்காபுரி, மணப்பாறை வட்டாட்சியர்கள், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், மணப்பாறை நகராட்சி ஆணையர், வளநாடு புத்தாநத்தம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலை வகித்தனர்.

ADVERTISEMENT

நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக் கல்வித்துறை, வருவாய்த்துறை, வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் பராமரிப்புத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, உணவு துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொகுதியின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்துப் பேசினார்கள்.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது பேசும்போது, இந்நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்த தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து இக்கலந்தாலோசனை கூட்டத்தை ஆறுமாதத்திற்கு ஒருமுறை நடத்த அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அனைத்து பணிகளையும் விரைவு படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT