ADVERTISEMENT

நகரங்களில் மட்டுமே செல்லும் பத்து ரூபாய் நாணயங்கள்

05:34 PM Mar 11, 2019 | Anonymous (not verified)

பணம் படைத்த முதலாளிகள், நகர்புறங்களில் வாழும் மக்கள் , கிராமபுறங்களில் வாழும் மக்கள், சாலையோரம் வாழும் மக்கள் என்ற பிரிவுகளை தாண்டி அனைவரும் இச்சமூகத்தில் முக்கியத்துவமான அங்கங்கள் தான். சாலையோர மக்கள் ஒரு வேலை உணவு சாப்பிடுவதற்கு மிகவும் அதிகப்படியான உழைப்பை அளிக்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட மக்கள் தங்களின் முழு உழைப்பை அளித்து அதிலிருந்து பெறக்கூடிய ஊதியத்தை கழிப்பதற்கு சிந்தித்தே செயல்பட வேண்டியிருக்கும். அச்சூழலில் இந்த பத்து ரூபாய் நாணயம் அவர்களை பெரும் மன உழைச்சலுக்கு தள்ளப்படுகின்றது.

ADVERTISEMENT

தமிழகத்தில் பல இடங்களில் உள்ள வியாபாரிகளிடமிருந்து வங்கிகள் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதே இந்த பிரச்னையின் ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுகிறது.
சாலையோர கடைகள் முதல் ஷாபிங் காம்பிலக்ஸ் வரையுள்ள அனைத்து வியாபாரிகளும் தாங்கள் அன்றாடம் லாபம் பார்க்கும் பணத்தில் பெரும் பங்கு சில்லறைகளாகவே இருக்கும். அவ்வாறு சில்லறைகளாக வரும் பணத்தை குறிப்பாக பத்து ரூபாய் நாணயத்தை வங்கி அதிகாரிகள் முறையாக எந்த காரணமும் சொல்லாமல் வாங்க மறுப்பதால் சமூகத்தில் பண சுழற்சி துண்டிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

10 ரூபாய் நாணயம் மறுக்கப்படுவதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது போலி பத்து ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதாகவும் அதனாலேயே அவற்றை வாங்க மறுப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். 2005-ல் அறிமுகப்படுத்தப்பட்டு 2011-ல் நடைமுறையில் கொண்டுவரப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் சில தவறான காரணங்களினால் மறுக்கப்பட்டு வருகின்றனர்.ஆனால் ரிசர்வ் வங்கி தற்போது 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை உருவாக்கி புழகத்தில் விட்டுள்ளது. இந்த நாணயத்தை திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை போன்ற பகுதிகளில் பத்து ரூபாய் நாணயம் தவிர்க்கப்படுகின்றனர்.

இதனால் பள்ளி மாணவிகள் முதல் வயதான முதியோர் வரை சிரமத்திற்கு ஆளாகி விடுகின்றனர். இதற்கு ரிசர்வ் வங்கி பலமுறை அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால் பல வியாபாரிகள் மற்றும் வங்கிகள் அவர்களின் சிரமத்தை குறைக்கவும், வயதான பெரியவர்கள் மீதும் சாதாரண மக்கள் மீதும் அதிகப்படியான சிரமத்தை அளிக்கின்றனர். இதற்கு உடனடியாக தக்கநடவடிக்கையை ரிசர்வ் வங்கியும் தமிழக அரசும் இணைந்து எடுக்க வேண்டும்.

பா.விக்னேஷ் பெருமாள்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT