ADVERTISEMENT

தஞ்சையில் வனத்துறையிடம் சிக்கிய தேக்கு மரங்கள்!

06:00 PM May 31, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தஞ்சை மாவட்டத்தில் தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்களை கல்லணை கால்வாய் கரைகளில் வளர்க்கப்பட்டு வருகிறது. அதனால் விவசாயிகளிடம் இருந்து தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்களை வியாபாரிகள் வாங்கினாலும் அந்த மரங்களை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல வனத்துறை அனுமதிபெற வேண்டும்.

ADVERTISEMENT


நேற்று இரவு தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள ஆவணம் கிராமத்தில் தேக்கு மரங்கள் ஏற்றி சென்ற ஒரு டிராக்டரை வனத்துறையினர் நிறுத்தி விசாரணை செய்து மரங்களை ஏற்றிச் செல்வதற்கான ஆவணங்களை கேட்ட போது, எந்த ஆவணமும் இல்லை என்பது தெரிய வந்தது. அதனால் அந்த தேக்கு மரங்கள் ஏற்றிச் சென்ற டிராக்டரை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள் ஆவணம் கிராமத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் ஆவணங்கள் இல்லாமல் ஏற்றி வந்த தேக்கு மரங்கள் விவசாயிகளிடம் வியாபாரி வாங்கயதா அல்லது வனத்துறைக்கு சொந்தமான கடத்தல் மரங்களா என்றும் விசாரணை நடக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT