ADVERTISEMENT

வீரப்பன் வேட்டையில் சப்-இன்ஸ்பெக்டரான 62 பேர் பதவி உயர்வு கோரி வழக்கு!

06:44 PM Jun 26, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் பணியாற்றிவரும் 62 சப்-இன்ஸ்பெக்டர்கள், அடுத்தகட்டமாக, இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது தயாரித்துள்ள பதவிப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உள்ளனர்.

ADVERTISEMENT

வேலூர், திருச்சி, கோயம்புத்தூர், சென்னை, கடலூர், விழுப்புரம் உள்பட பல இடங்களில் இருந்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக 62 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் சார்பாக வழக்கறிஞர் பாலடெய்சி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில், அவர்கள் கூறியிருப்பதாவது, “தமிழகம் முழுவதும், நாங்கள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருகிறோம். வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட எங்களுக்கு அரசு பதவி உயர்வு வழங்கியது. கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை, சப் இன்ஸ்பெக்டர் பதவி பெற்றோம். தற்போது, சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறோம். அடுத்தகட்டமாக, எங்களுக்கு இன்ஸ்பெக்டராக பதவி வழங்க வேண்டும். தமிழக அரசு, எங்களுக்கு பதவி வழங்காமல், கடந்த 2008-ஆம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் ஆனவர்களுக்கு பதவி உயர்வு வழங்க ஒரு பட்டியல் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் சட்டவிரோதமானது.

கடந்த 2004-ஆம் ஆண்டு பதவி பெற்ற எங்களுக்கு பதவி உயர்வு கொடுத்து விட்டுத்தான், மற்றவர்களுக்கு பதவி வழங்க வேண்டும். இதனால், நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்குப் பின்னே வந்த இவர்களுக்கு பதவி வழங்கினால், எங்களுக்கு பதிப்பாகிவிடும். எனவே, தற்போது தயாரித்துள்ள அந்தப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். அதற்குத் தடை விதிக்க வேண்டும். எங்கள் 62 பேருக்கு பதவிகள் வழங்கி விட்டுத்தான் மற்றவர்களுக்கு பதவி வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த வழக்கு, நீதிபதி மகாதேவன் முன்பாக வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT