ADVERTISEMENT

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு!

10:42 PM Jan 06, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா, ஒமிக்ரான் அதிகரிப்பு காரணமாக, தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கின் போது, வணிக வளாகம், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி?

இரவு நேர ஊரடங்கின் போது பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ், மருத்துவம் சார்ந்த பணிகள், ஏடிஎம்கள், சரக்கு வாகனம், எரிபொருள் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகள் 24 மணி நேரமும் செயல்படத் தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கையொட்டி, சென்னையில் 10,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேர ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே சுற்றக் கூடாது. கரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கையுடன் அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT