ADVERTISEMENT

தொழிற்சாலைகளைத் திறப்பது குறித்து முதல்வர் ஆலோசனை!

02:35 PM May 01, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள ஆட்டோமொபைல், மோட்டார், செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்பட அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாகத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் மே- 3 ஆம் தேதிக்குப் பிறகு தொழில் நிறுவனங்களைப் படிப்படியாகத் திறக்க அனுமதிப்பது குறித்து சென்னை முகாம் அலுவலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தொழில்துறை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே முதல்வர் பழனிசாமியிடம் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலான 17 பேர் கொண்ட வல்லுநர் குழு தனது இரண்டாம் கட்ட அறிக்கையைச் சமர்பித்தது. அதில் மே- 3 ஆம் தேதிக்குப் பிறகு கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைப் பற்றி தமிழக அரசிடம் கூறியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT