ADVERTISEMENT

உள்ளாட்சித் தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு!

09:48 AM Dec 27, 2019 | santhoshb@nakk…

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (27.12.2019) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

தமிழகத்தில் மொத்தம் உள்ள 91,975 ஊரக உள்ளாட்சிப் பதவிகளில் முதற்கட்டமாக 45,336 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. சுமார் 24,680 வாக்குச்சாவடிகளில் மாலை 05.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ADVERTISEMENT


சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்தவாறே, ஊரக உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி வெப் கேமராவில் நேரில் பார்த்து வருகிறார். அவருடன் தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியனும் பார்வையிட்டு வருகிறார்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்டத்தேர்தல் வரும் 30- ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அதன் பிறகு பதிவான வாக்குகள் ஜனவரி 2- ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT