ADVERTISEMENT

நாஞ்சில் சம்பத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது!

04:53 PM Jan 26, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2021- ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நெல்லை கண்ணன்- இளங்கோவடிகள் விருது, பாரதி கிருஷ்ணகுமார்- மகாகவி பாரதியார் விருது, புலவர் செந்தலை கவுதமன்- பாவேந்தர் பாரதிதாசன் விருது, சூர்யா சேவியர்- சொல்லின் செல்வர் விருது, கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்- சிங்காரவேலர் விருது, நாஞ்சில் சம்பத்- பேரறிஞர் அண்ணா விருது, முனைவர் சஞ்சீவிராயர்- அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, உயிர்மை திங்களிதழுக்கு- சி.பா. ஆதித்தனார் திங்களிழ் விருது, முனைவர் அரசேந்திரன்- தேவநேயப்பாவாணர் விருது, நா.மம்மது- உமறுப்புலவர் விருது, முனைவர் ராசேந்திரன்- கி.ஆ.பெ.விருது, பாரதி பாஸ்கர்- கம்பர் விருது, ஏ.எஸ்.பன்னீர் செல்வம்- ஜி.யு.போப் விருது, சுகி.சிவம்- மறைமலையடிகள் விருது, ஞான.அலாய்சியஸ்- அயோத்தித்தாசப் பண்டிதர் விருது, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்- தமிழ்த்தாய் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ரூபாய் 2 லட்சமாக உயர்த்தியும், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT