ADVERTISEMENT

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்தம்!

02:28 PM Aug 26, 2019 | santhoshb@nakk…

தமிழக மின்சார வாரியத்தில் உள்ள 33 ஆயிரம் காலியிடங்களுக்கு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணியை வழங்காமல் வட மாநிலத்தவருக்கு வழங்கியுள்ளது. இதன் தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தை மின்வாரியம் தலைமை அலுவலகத்தில் நடத்திவருகின்றனர். தமிழக மின்சார வாரியத்தில் உள்ள களப்பணிக்கான காலியிடங்கள் இருந்து வருகின்ற சூழ்நிலையில், அந்த களப்பணி இடத்தில் இருந்தவர்கள் பதவி உயர்வு பெற்று கம்பியாளராக பணியாற்றி வருகின்றனர்.

ADVERTISEMENT


தற்போது அந்த இடங்களில் உள்ள பணிகளை ஒப்பந்த தொழிலாளர்கள் தான் செய்து வந்துள்ளனர். இந்த இடங்களில் உள்ள பணிகளுக்கு வட மாநிலத்தவரை நியமித்து வருகின்றனர். அப்படி நியமிக்கும் அவர்களுக்கு இரண்டு வருடம் பயிற்சி கொடுக்கப்பட்டு, அதன் பிறகு பணியமர்த்தப்படுவார்கள். ஆனால் ஒப்பந்த தொழிலாளர்கள் பல வருடங்களாக பணியை செய்து வருகின்ற நிலையில், அவர்களுக்கு பணி வழங்காகதது, அவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் செயல். இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், நாங்கள் மின் வாரியத்தில் 1997 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகிறோம்.

ADVERTISEMENT

எங்களுக்கு முறையான ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை, மாதத்திற்கு மூன்று உயிர்களை நாங்கள் இழந்து வருகிறோம். பேரிடர் காலங்களில் பணிபுரிந்தவர்களுக்கு தினக்கூலியாக 380 வழங்கப்படும் என்று அறிவித்து அரசு, எங்கள் உழைப்பை மட்டும் சுரண்டிக்கொண்டு, அந்த பணத்தையும் இதுவரை கொடுக்கவில்லை. தற்போது வெளி மாநிலத்தவரை பணிக்கு கொண்டு வருவது எங்களை குழிதோண்டி புதைப்பதற்கு சமம். மின்துறை அமைச்சர் சொல்லியதால் தான் நாங்கள் பேரிடர் காலத்தில் பணியாற்றினோம் என்றார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT