ADVERTISEMENT

விசிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்... வெளியான லிஸ்ட்!

03:50 PM Mar 04, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக - விசிக இடையே நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில், விசிகவிற்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இன்று (04.03.2021) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். முன்னதாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், திமுக - விசிக கூட்டணியில், விசிகவிற்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் நின்று வெற்றிபெற்றனர். அதேபோல், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக - விசிக கூட்டணி தொடர்ந்தது. வரும் தேர்தலில் விசிகவிற்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படும், குறிப்பாக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெறுவோம் என அக்கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், 6 இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் தனிச் சின்னத்தில் விசிக போட்டியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் விசிக போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வேளச்சேரி, கள்ளக்குறிச்சி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி, திட்டக்குடி, உளுந்தூர்பேட்டை, சோழிங்கநல்லூர், குன்னுர், மயிலம் ஆகிய தொகுதிகளில் விசிக போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT