ADVERTISEMENT

"ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு தேர்வு"- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

11:12 AM May 12, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டத்தால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கல்லூரி பருவத்தேர்வுகள், நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வு, சிவில் சர்வீஸ் தேர்வுகள், அரசுப் பணி தேர்வுகள் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டிருந்தனர். இந்தத் தேர்வுகளுக்கான புதிய தேதி தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT


இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள வேதியியல், கணிதவியல், புவியியல் பாடங்களுக்குத் தேர்வுகள் ஜூன் 2 ஆம் தேதி முதல் நடைபெறும். பிளஸ் 2 வகுப்பைச் சேர்ந்த 36,842 மாணவர்களுக்கு ஜூன் 4 ஆம் தேதி தேர்வு நடைபெறும். பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 கல்லூரிகளில் நீட் பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மே 27 ஆம் தேதி தொடங்கும்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT