ADVERTISEMENT

ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம் ரூபாய் 7.85 கோடி வசூல்!

10:36 AM May 26, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நான்காவது முறையாக மே- 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

ADVERTISEMENT


இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,22,867 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் 7.85 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் தடையை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,31,179 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 4,98,995 வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT