ADVERTISEMENT

ரஜினி என்ன அரசியல் கட்சித்தலைவரா?- முதல்வர் பேட்டி!

05:34 PM Nov 11, 2019 | santhoshb@nakk…

கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

ADVERTISEMENT


கேள்வி: கூட்டணி தொடருமா? உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றி?

ADVERTISEMENT

பதில்: நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் தொடரும். அதே கூட்டணியுடன் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் இணைந்து மாமல்லப்புரத்தை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


கேள்வி: தொடர்ந்து ஆளுமை மிக்க தலைவர்களுக்கு தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது சொல்லுவது ஏன்?

பதில்: தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை என்பது இடைத்தேர்தலில் நிரூபணமாகியுள்ளது. ரஜினி என்ன அரசியல் கட்சித் தலைவரா? அவர் ஒரு நடிகர்? வெற்றிடம் என தொடர்ந்து அதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என யார் சொன்னது?


கேள்வி: அமமுகவின் புகழேந்தி அதிமுகவில் வந்தால் ஏற்று கொள்வீர்களா?

பதில்: அதிமுகவில் இணைவது குறித்து புகழேந்தி கடிதம் கொடுத்தால் தலைமை கழக நிர்வாகிகள் பரிசீலித்து முடிவு எடுப்பார்கள்.





ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT