ADVERTISEMENT

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 347.76 கோடி நன்கொடை!- தமிழக அரசு!

02:52 PM May 06, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

கரோனா தடுப்பு பணிகளுக்காக அரசியல் கட்சித்தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கும், மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில் கரோனா தடுப்புப் பணிகளுக்காகத் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 347,76 கோடி நன்கொடை வந்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஒருநாள் ஊதியத்தை வழங்கிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ரூபாய் 20 கோடியும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூபாய் 5 கோடியும் நன்கொடை வழங்கியுள்ளன.

(01.05.2020- 05.05.2020) ஐந்து நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 41 கோடியே 34 லட்சத்து 4 ஆயிரத்து 882 ரூபாய் நன்கொடை வந்துள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT