ADVERTISEMENT

கரோனா தடுப்பு பணிக்கு மக்கள் நிதி தரலாம்- தமிழக அரசு!

05:28 PM Mar 27, 2020 | santhoshb@nakk…

கரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற உதவிகளை மக்கள் செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற உதவிகளை மக்கள் செய்யலாம். முதல்வரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடையை நேரடியாக வழங்குவதை ஊக்குவிக்க இயலாது. எனினும் ரூபாய் 10 லட்சத்திற்கும் மேல் நிதி தருவோரின் விவரங்கள் பத்திரிகைகளில் வெளியிடப்படும்.
நன்கொடைகளை வருமான வரிச் சட்டப்பிரிவு 80(G) இன் கீழ் 100% வரி விலக்கு உண்டு. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 117201000000070, IFSC: IOBA0001172 இல் நிதியுதவி அளிக்கலாம். மேலும் https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணைய தள வழியாக நிதியுதவி அளித்து ரசீதினை பெற்று கொள்ளலாம். வெளிநாடு வாழ் மக்கள் IOBAINBB001, Indian Overseas Bank- ல் (Central Office, Chennai)நிதியுதவி அளிக்கலாம்." இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT