ADVERTISEMENT

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

08:11 AM May 26, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கத்தாரில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் உட்பட 24 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த 22/03/2021 அன்று, ஈரான் நாட்டிலிருந்து, அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் என 24 இந்திய மீனவர்கள், கடந்த 25/03/2021 அன்று கத்தார் நாட்டு கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக கத்தாரில் உள்ள ரஸ் லாஃபான் காவல் நிலையத்தில் அவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலை என்னவானது என்று அறியாமல் கவலையடைந்துள்ள அவர்களது குடும்பத்தினர், அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்கூறிய விவரங்களைக் குறிப்பிட்டு, கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் வாயிலாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்து, தாயகத்திற்கு அனுப்பிட வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT