ADVERTISEMENT

பெருந்துறை, திருப்பூர் மருத்துவமனைகளில் முதல்வர் ஆய்வு! (படங்கள்)

04:52 PM May 30, 2021 | santhoshb@nakk…

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையிலும், திருப்பூர் அரசு மருத்துவமனையிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (30/05/2021) ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெருந்துறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள 400 கூடுதல் படுக்கைகள் கொண்ட கரோனாசிறப்பு சிகிச்சை மையத்திலும் முதல்வர்ஆய்வு செய்தார்.

ADVERTISEMENT

பெருந்துறையில் 5 மருத்துவர்கள், 5 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார். அதேபோல், திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்தார்.

ADVERTISEMENT

நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சைகளை மேற்கொள்ள 20 கார் ஆம்புலன்ஸ் சேவையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிபிஇ கிட் அணிந்து கரோனா வார்டில் ஆய்வு செய்தார்.

முதல்வரின் ஆய்வின் போது, தமிழக அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், கயல்விழி செல்வராஜ், தி.மு.க.வின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT