ADVERTISEMENT

23 மாவட்டங்களில் ஜவுளி, நகைக்கடைகள் திறக்க அனுமதி!

10:26 PM Jun 27, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் ஜவுளி, நகைக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பான தமிழக முதலமைச்சரின் அறிவிப்பில், "தமிழக அரசின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நாளை (28/06/2021) முதல் நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பொதுமக்கள், வணிக அமைப்புகள் ஆகியோரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் கருத்துகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு பின்வரும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.

வகை 2-ல் உள்ள மாவட்டங்களான அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள துணிக்கடைகள், நகைக்கடைகள் காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதியின்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்.

பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மேற்படி புதிய தளர்வுகளை அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிப் பொறுப்புடன் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT