ADVERTISEMENT

'எனக்கு என்ன ஆசையா இப்படி நடக்க வேண்டும் என்று...' - விமர்சனத்திற்குப் பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன்

11:19 AM Mar 27, 2024 | kalaimohan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ADVERTISEMENT

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜனும், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ச்செல்வி என்ற பேராசிரியரும், அதிமுக சார்பில் ஜெயவர்தனும் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், அண்மையாகவே கையில் ஸ்டிக் உடன் காலில் பேண்டேஜ் அணிந்தபடி தமிழச்சி தங்கபாண்டியன் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட நிலையில், செய்தியாளர்கள் இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

சமூக வலைத்தளங்களில் நீங்கள் கையில் வாக்கிங் ஸ்டிக் உடன் வருவது குறித்து விமர்சனங்கள் வைக்கிறார்கள். இதற்கு உங்கள் கருத்து என்ன எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''என்ன விமர்சனம் வைக்கிறார்கள். ஸ்டிக்குடன் நடக்க வேண்டும் என எனக்கு என்ன ஆசையா? உண்மையிலேயே எனக்கு புரியவில்லை. ஸ்டிக்கோடு நடப்பதற்கு யாராவது ஆசைப்படுவாங்களா? இது மிக மிக முக்கியமான தருணம். இந்த நேரத்தில் நான் நடக்கக்கூடாது ஓட வேண்டும். அப்படிப்பட்ட நேரத்தில் யாராவது ஸ்டிக்குடன் நடக்க வேண்டும் என அவசியம் இருக்கா? எனக்கு மம்தா பானர்ஜி மீதும் அவருடைய கொள்கை மீதும் மிகப்பெரிய மரியாதை உண்டு. இந்த மாதிரியான விமர்சனங்கள் வைப்பவர்களுக்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT