ADVERTISEMENT

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் பணம் பறிமுதல்!

12:01 AM Sep 24, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவரான A.V.வெங்கடாசலம் வீட்டிலிருந்து ரூபாய் 13.5 லட்சம் ரொக்கம், தங்க நகைகளைப் பறிமுதல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இன்று (23/09/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான A.V.வெங்கடாசலம், IFS (Retired) என்பவர் Member Secretary TNPCB; சென்னை 4.10.2013 to 29.07.2014, Member Secretary SEIAA (2017 - 2018), தலைவர் TNPC8, சென்னை (27/09/2019) முதல் 23/09/2021 வரை) மீது குற்றம் மற்றும் ஊழல் முறைகேடு சம்பந்தமாக 23/09/2021 ஆம் தேதியன்று சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் C.No. 1721, U/S 13(2) tw 13(1) (c), 13(1) (d) Prevention of Corruption Act 1968 and 7: 13(2) riw 13(1)(n) of Prevention of Corruption Act 1988 as Amended in 2018- ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், கிண்டி சென்னை -600032 உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் இன்று (23/09/2021) தேதியன்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ரூபாய் 13.5 லட்சம் ரொக்கம், இதுவரை சுமார் 6.5 கிலோ தங்கம் (தோராயமாக சுமார் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் மதிப்பு) மற்றும் வழக்கு சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பணம் ரூபாய் 13.5 லட்சம் மற்றும் இவ்வழக்கிற்குச் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வெங்கடாசலம் வீட்டில் 10 கிலோ சந்தன மரப்பொருட்கள், சந்தனத் துண்டுகள் இருப்பதால் வனத்துறையினருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT