ADVERTISEMENT

காவலர்கள் வீரவணக்க நாளில் அஞ்சலி செலுத்திய தமிழக காவல்துறை டி.ஜி.பி திரிபாதி

05:46 PM Oct 21, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

1995 ஆம் ஆண்டு லடாக்கின் ஹாட் ஸ்பிரிங் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்தனர். அவர்களின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று காவலர் வீரவணக்க நாளையொட்டி பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நினைவு சின்னத்தில் தமிழக காவல்துறை டி.ஜி.பி. ஜெ.கே. திரிபாதி அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு தொடங்கி இது வரையிலும் 379 காவலர்கள் உயிழந்துள்ளனர். மேலும் இதுபோன்ற உயிர் இழப்பை ஏற்படுத்தாத வகையிலும், தன்னுடைய பணியை நேர்த்தியான வகையிலும் செயல்படுத்த வேண்டும்” என்று உறுதிமொழி ஏற்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT