ADVERTISEMENT

ஃபானியால் பாதிக்கப்பட்ட ஒடிஷா மாநிலத்திற்கு 10 கோடி நிவாரண நிதி -தமிழக அரசு அறிவிப்பு

03:17 PM May 05, 2019 | kalaimohan


ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷா மாநிலத்திற்கு 10 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

வங்க கடலில் உருவான புயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி நகர்ந்து கோபால்பூர் மற்றும் பூரி தெற்கே உள்ள சந்த்பாலி இடையே நேற்று முன்தினம் காலை புயல் கரையை கடந்தது. ஃபானி புயலால் ஒடிசா மாநிலம் புரியில் பலத்த காற்று வீசியது. இதனால் அங்கு சில இடங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டது.

இந்நிலையில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷா மாநிலத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் வழங்கப்பட இருப்பதாக எடப்பாடி அறிவித்துள்ளார். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷாவிற்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. இந்த புயலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக மக்கள் சார்பில் இரங்கல் தெரிவித்துக்கொள்ளவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT