
கிராம ஊராட்சிகளில் தூய்மைப் பணி செய்யும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 'அனைத்து கிராம ஊராட்சிகளையும் தூய்மையாக வைத்திருக்கும் தூய்மைக் காவலர்கள் இல்லம் தோறும் திடக்கழிவுகளைச் சேகரித்து தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திரமதிப்பூதியம்3,600லிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக அரசு கூடுதலாக 112 கோடி ஒதுக்கீடு செய்யும்' எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)