ADVERTISEMENT

‘தமிழ்நாடு நாள்’ - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

03:38 PM Jul 20, 2019 | rajavel

ADVERTISEMENT

சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார்.

ADVERTISEMENT

அதில் அவர், ''தமிழறிஞர்களுக்கு புதிய விருதுகளையும், நிதியுதவிகளையும் வழங்கி, இதுவரை 149 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கி, அவர் தம் மரபுரிமையாளர்களுக்கு அரசு பரிவுத் தொகை வழங்கியுள்ளது.


அவ்வரிசையில் இவ்வாண்டு, உளுந்தூர் பேட்டை சண்முகம், கவிஞர் காமராசு, முனைவர் இளவரசு, தமிழறிஞர் அடிகளாசிரியர், புலவர் இறைக்குருவனார், பண்டித கோபால கிருட்டிணன், பாபநாசம் குறள்பித்தன் ஆகியோரின் படைப்புகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் நாட்டுடைமையாக்கப்படும். இதற்கென 35 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956-ம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டு தோறும் நவம்பர் 1-ம்நாள் ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

உலக அற இலக்கியமான திருக்குறளின் பெருமையை பரவச் செய்யும் வகையில், ஆண்டுதோறும் ஒரு இந்திய மொழி மற்றும் ஒரு உலகமொழி ஆகியவற்றில் திருக்குறள் மொழியாக்கம் செய்து வெளியிடப்படும். இதற்கென தொடர் செலவினமாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஆண்டு இந்திய மொழிகளான அசாமி மற்றும் சிந்தி மொழிகளிலும், உலக மொழியான ஈப்ரு மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT