ADVERTISEMENT

மார்ச் 18- ல் தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்!

06:54 PM Mar 08, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (08/03/2022) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு, "2022- 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 18- ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. 2022- 2023- ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் மார்ச் 19- ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை அரங்கில் நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 18- ஆம் தேதி அன்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்" என்றார்.

தமிழக நிதியமைச்சராகப் பொறுப்பேற்று முதல்முறையாக முழு பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT