தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் (24/03/2020) நிறைவடைவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

Advertisment

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2- வது அமர்வு மார்ச் 8- ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு துறை சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisment

tn assembly session over speaker announced

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதைத் தொடர்ந்து இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே ஒத்திவைக்கப்படுவதாகச் சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

Advertisment

ஏப்ரல் 9- ஆம் தேதி வரை நடக்கவிருந்த கூட்டத்தொடர் மார்ச் 31- ஆம் தேதியுடன் நிறைவு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு என்ற அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.