ADVERTISEMENT

பணநோக்கதிற்காக மட்டுமின்றி சமூக நலனுக்காகவும் படம் எடுக்கவேண்டும்!! சர்கார் விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

10:57 AM Jul 07, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சர்க்கார் படக்குழு சார்பில் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் உள்ள புகைபிடிப்பது போன்ற காட்சிகளை நீக்கவேண்டும் என சுகாதாரத்துறை நோட்டிஸ்அனுப்பிய விவகாரம் குறித்து பேசுகையில்,

திரைப்படம் என்பது சமூக கருத்துக்களை கொண்ட ஒன்றாக இருக்க வேண்டும் பணத்திற்கான ஒன்றாக மட்டும் இருந்துவிடக்கூடாது. அதுபோல் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை நடிகர்கள் தவிர்க்க வேண்டும்.

மீடியா என்பது ஒரு பலம்பொருந்திய சக்தி அதை வியாபார நோக்கிற்காக நடிகர்களும் இயங்குனர்களும் பணம் போட்டு படம் எடுக்கப்போகிறோம் எனவே நன்கு சம்பாரிக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்கக்கூடாது. புகைபிடிக்கும் காட்சிகள் மற்றும் தேவையற்ற காட்சிகளை சமூக நலனை கருத்தில் கொண்டு தவிர்க்க வேண்டும்..

எம்.ஜி.ஆர் நடித்த எந்த படத்திலும் புகைக்கும், மதுவிற்கும் அனுமதி இல்லை. மேலும் சமூக கருத்துக்கள்தான் அதிகம் என்று கூறினார்.

அதேபோல் பிளாஸ்டி பயன்படுத்த விலக்கு கொண்டுவந்ததை போல் சிகரெட்டுக்கு தடை விதிக்க முடியாதா என ஒரு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு

அது மாநில அரசு முடிவு அல்ல மத்திய அரசு எடுக்கவேண்டிய முடிவு. நாடுமுழுவதும் தடை கொண்டுவந்தால்தான் அது சாத்தியம் என்றுகூறினார். ஆனால் மதுவிலக்கை கொண்டுவருவதுதான் அதிமுகவின் நிலைப்பாடு ஆனால் மதுவிலக்கினால் எரிசாராயம்,டர்பன் டைன் என சட்டவிரோத மதுக்கள் அதிகரித்துவிடும் என்றுகூறிய அவர் ஒரே நேரத்தில் சட்டமன்றம் நாடாளுமன்றம் தேர்தல் என்ற விவகாரத்தில் அம்மாவின் கொள்கையையே அதிமுக கடைபிடிக்கும் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT