ADVERTISEMENT

ஹெச்.ராஜாவுக்கு தனது பாணியில் பதில்கொடுத்த சூர்யா-வைரலாகும் ஸ்க்ரீன் ஷாட்! 

05:44 PM Nov 05, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா இயக்குநர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் 'ஜெய் பீம்' படத்தில் நடித்துள்ளார். ரஜிஷா விஜயன், மணிகண்டன், லியோ மோல் ஜோஸ் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். '2டி எண்டர்டைன்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பழங்குடி இன மக்களுக்குக் குரல் கொடுக்கும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். உண்மை நிகழ்வை அடிப்படியாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பிலிருந்து நல்ல விமர்சனங்களை இப்படம் பெற்றுள்ளது. இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில், பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா இந்த திரைப்படம் குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், 'நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம்' என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஹெச்.ராஜாவுக்கு நடிகர் சூர்யா தனது பாணியில் பதில்கொடுக்கும் வகையில் ஹெச்.ராஜாவின் டிவிட்டர் பதிவை லைக் செய்துள்ளார். அதுதொடர்பான ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT