ADVERTISEMENT

அண்ணா பல்கலை குழுவின் ரோபோ சுஜித்தின் கைகளை பற்றியதாக தகவல்!

08:13 PM Oct 26, 2019 | kalaimohan

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு முயற்சி எடுத்துவருகிறது.

ADVERTISEMENT


இந்நிலையில் ஏற்கனவே அனுப்பப்பட்ட ஹைட்ராலிக் கருவி சுஜித்தின் ஒரு கையை கட்டியுள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழக குழுவினர் அனுப்பிய ரோபோவின் இறுக பிடிக்கும் கருவி தற்போது சுஜித்தின் இன்னொரு கையை பற்றி பிடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்தகட்டமாக சுஜித்தை மேலே கொண்டு வரும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சுஜித் தற்போது 100 அடி ஆழத்தில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

சென்சார், கேமரா, லெட் லைட் கொண்ட அந்த ரோபோவின் கரங்கள் தற்போது சுஜித்தின் கையை பற்றியுள்ளது. இந்த முயற்சியின் பலனை பொறுத்தே அடுத்தகட்டமாக ஆழ்துளை கிணற்றில் இருந்து 3 மீட்டர் தூரத்தில் ஒரு மீட்டர் அகலத்தில் 90 அடியில் குழித்தோண்டும் முயற்சி, நடவடிக்கைக்கு கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT