Skip to main content

டுவிட்டரில் ட்ரெண்டாகும் ''சேவ் சுர்ஜித்'' -இறுதிகட்டத்தில் மீட்புப்பணி 

Published on 25/10/2019 | Edited on 25/10/2019

திருச்சி  மனப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் இரண்டு வயது குழந்தையான சுஜித் வீட்டின் அருகே 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ள நிலையில் தற்போது ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டிருக்கும் குழந்தையை மீட்கும் பணியில் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவிவருகியது. 

 

 "Save Surjit" Trend on Twitter

 

trend

 

மதுரையில் இருந்து மணிகண்டன், நாமக்கல்லில் இருந்து டேனியில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளனர். மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த சிறப்பு குழந்தைமீட்பு கருவி மூலம் குழந்தை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு கையில் சுருக்கு கயிறு மாட்டப்பட்ட நிலையில் குழந்தையின் மற்றொரு கையில் சுருக்கு கயிறு மாட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு கைகளிலும்  சுருக்கு கயிறு மாட்டப்பட்டவுடன் குழந்தை மேலே தூக்கப்படும் என மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ''சேவ் சுர்ஜித்'' என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் இந்த மீட்பு பணி ஆனது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பத்திரமாக மீட்கப்படும் என தீயணைப்பு துறையினரும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்